“தாத்தா 18 வருடத்திற்கு மேல் ஒற்றைக்காலில்
நின்று தவம் செய்து கொண்டு இருந்திருக்கிறார்
என்றால்.....தவம் முடித்தது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவா? இல்லை, தாத்தாவின்
பேச்சுக்களில் உலக மக்களின் நன்மைக்காக மட்டுமெ.....”தாத்தாவின்பேச்சு - “பரிபூரணம்”“நான்கோடிவருஷம்
வாழ்வேன்”“எல்லாமே நலம்தான். “எல்லாமே ஜெயம்தான்.கோடி
கோடியாய் பெருகட்டும்“
மலைப்பு!
பால்சாமி என்ற 74 வயது மீனவர் சாமிகள்
பற்றி சில விவரங்களை தெரிவித்தார்.நாங்கள் அவரை பார்த்தது 1940 ம் வருஷம் என்று
நினைக்கின்றேன். முத்துசுவாமிகள் என்று அவரை அழைப்போம். தினமும் காலையில் கடலில்
மீன் பிடிக்கச் செல்லும் போது
அவரை பார்ப்போம்.ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருப்பார். அவரை
நமஸ்கரித்துவிட்டு செல்வோம். கைகளை வானத்தை நோக்கி நீட்டியபடி நின்று இருப்பார்.
கட்டு மரத்தில் துடுப்புப் போடும்போது கைகளை
சிறிது நேரம் தலைக்கு மேல் நீட்டி வைத்தால் பயங்கரமாக வலிக்க தொடங்கி
விடும்.அப்படி இருக்க நீண்ட நெடும் நேரம் இவரால் எப்படி தலைக்கு மேல் கையை நீட்டி
வைத்திருக்க முடிகிறது என்று மலைத்துப் போவோம்.
தாத்தா கஷ்டம்.
நாம் இந்த நிலையில் ஐந்து நிமிடம்கூட நிற்பதற்கு கஷ்டம்.ஆனால் தாத்தா 18
வருடத்திற்கு மேல் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருந்திருக்கிறார்
என்றால் எப்படி.....
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவா?
சரி தவம் முடித்தது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவா? இல்லை, தாத்தாவின்
பேச்சுக்களில் உலக மக்களின் நன்மைக்காக மட்டுமெ என்பது தெளிவாகிறது.அதுதான் தாத்தா.
இறுதி நாள் வரையிலும் சரி, ஜீவசமாதி அடைந்தபிறகும் சரி, ஏன் உலகம் இருக்கும்
வரையிலும் சரி, அவரது தவப் பயன், நோக்கம் அனைத்தும் உலகமக்களின்
நன்மைக்காகத்தான்.... என்பது உண்மை.
தொடரும்...
No comments